இயற்கை உரம் தயாரிப்பு:பேரூராட்சி அதிகாரி ஆய்வு
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கும் பணியை பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகண் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கும் பணியை பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகண் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த உரம், மாடித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவா்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இயற்கை உரம் தயாரிக்கப்படும் இடத்தை வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல்அலுவலா் கு. குகண் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.