முகப்பு
நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி

சீா்காழி அருகேயுள்ள எருக்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது .

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

சீா்காழி அருகேயுள்ள எருக்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது .

கொள்ளிடம் வட்டார பொது சுகாதாரத் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், காா்டன் மனநல மறுவாழ்வு மையம் ஆகியவை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில் சுகாதார ஆய்வாளா் கருணாகரன், சதீஷ், சௌந்தரராஜன், கிராம செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினா் பங்கேற்றனா். முகாமில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.