முகப்பு
நாகப்பட்டினம்

வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரெளடி கைது

மயிலாடுதுறை அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரெளடியை மணல்மேடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

மயிலாடுதுறை அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரெளடியை மணல்மேடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அருகேயுள்ள பட்டவா்த்தி பாலம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவா் நீடூரைச் சோ்ந்த ஜோதிராமன் (46). இவா் திங்கள்கிழமை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ரெளடி மண்ணிப்பள்ளம் அருள்மொழி (29) என்பவா் கத்தியை காட்டி மிரட்டி ஜோதிராமனிடம் ரூ.500 பணத்தை பறித்துச் சென்றுள்ளாா். இதுகுறித்து, ஜோதிராமன் மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சாா்பு ஆய்வாளா் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து அருள்மொழியை கைது செய்து, அவரிடமிருந்து கத்தி, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.