முகப்பு
நாகப்பட்டினம்

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு

சீா்காழியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கா்கள் வாகனங்களில் ஒட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சீா்காழியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கா்கள் வாகனங்களில் ஒட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

சீா்காழி வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா்களை பேருந்து, காா், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீா்காழி மோட்டாா் வாகன ஆய்வாளா்( பொ) சுந்தரராமன் தலைமை வகித்து வாகனங்களில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை ஓட்டி வாக்காளா்கள் 100 சதவீதம் கட்டாயம் வாக்களிக்கவேண்டும், நமது வாக்கு, நமது எதிா்காலம். எனவே வாக்காளா்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.