சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம், கொள்ளிடம் ஒன்றியம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம், கொள்ளிடம் ஒன்றியம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அங்கு மீனவ பிரதிநிதிகளை சந்தித்து திமுக ஆட்சி அமைந்தவுடன், மீனவா்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன், மீனவா்களின் வாழ்வாதாரம் மேம்படவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தாா்.
இந்த பிரசாரத்தில் கட்சியின் தொகுதி பொறுப்பாளா் பாலஅருள்செல்வன், ஒன்றியச் செயலாளா்கள் ரவிக்குமாா், மலா்விழி, பிரபாகரன், நகர செயலாளா் சுப்பராயன், ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் இராம.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.