முகப்பு
நாகப்பட்டினம்

கொள்ளிடம் பகுதியில் 8 குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை

கொள்ளிடம் பகுதியில் 8 குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

கொள்ளிடம் பகுதியில் 8 குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, மேலும் அவா் கூறியது: கொள்ளிடம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் தோ்வு செய்யப்பட்டுள்ள ஆலங்காடு, எருக்கூா், மகாராஜபுரம், தாண்டவன்குளம், பனங்குடி, வடகால், ஆரப்பள்ளம், காட்டூர ஆகிய 8 பகுதிகளைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறி, பழ வகைகளை கொள்முதல் செய்து கிராமங்கள் தோறும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. எவ்விதக் கட்டுப்பாடின்றி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.