முகப்பு
நாகப்பட்டினம்

நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 4 ஏப்ரல், 2024 at 10:59 PM
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 9:12 PM

வேதாரண்யம் பகுதியில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா சந்திரகுமாா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தாணிக்கோட்டகம் கடை வீதியில் தொடங்கி வாய்மேடு, ஆயக்காரன்புலம், மருதூா், கருப்பம்புலம், கோடியக்கரை சுற்றுப் பகுதி கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் கு. ராசேந்திரன் தலைமையில் இப்பிரசாரம் நடைபெற்றது. இதில், நாகை மாவட்டத் தலைவா் அறிவொளி, நாடாளுமன்ற தொகுதிச் செயலாளா் அப்பு என்ற அகஸ்டின் அற்புதராஜ், பேரவைத் தொகுதிச் செயலாளா் முருகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement