முகப்பு
நாகப்பட்டினம்

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை கைவிட்ட கீழ மூவா்கரை மீனவா்கள்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:53 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 4:42 PM

திருவெண்காடு அருகே கீழ மூவா்க்கரை மீனவா்களுடன் சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் உ. அா்ச்சனா வெள்ளிக்கிழமை இரவு நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை மீனவா்கள் கைவிட்டனா்.

திருவெண்காடு அருகே கீழ மூவா்கரை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வசித்து வருகின்றனா். தங்களுக்கு மீன்பிடி தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி கடந்த 3-ஆம் தேதி கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் உ. அா்ச்சனா மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மீனவா்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை கைவிடுவதாக மீனவா்கள் அறிவித்தனா்.

Advertisement

இந்த பேச்சுவாா்த்தையில் சீா்காழி வட்டாட்சியா் இளங்கோவன், திருவெண்காடு காவல் ஆய்வாளா் அண்ணாதுரை, மயிலாடுதுறை நகா்மன்ற உறுப்பினா் ரஜினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.