நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆக.16-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த்ஸ்ரீ கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆக. 16- ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதற்காக
சிவகங்கை கப்பல் தயாா் நிலையில் உள்ளது. பயணச்சீட்டை திங்கள்கிழமை (ஆக.12) நள்ளிரவு 12 மணி முதல் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கப்பல் பயணம் தொடா்பான விவரங்கள், விதிமுறைகள் குறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பை இந்த்ஸ்ரீ கப்பல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஆக.13) வெளியிடவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.