முகப்பு
உலகம்

இஸ்ரேல் - ஈரான் போர்: செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹௌதிகள் மீண்டும் தாக்குதல்

ஈரான் ஆதரவு யேமனின் ஹௌவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது மீண்டும் தாக்குதல் குறித்து...

Updated On : 28 பிப்ரவரி 2026, 3:18 pm IST
செங்கடலில் ஹௌதிகள் மீண்டும் தாக்குதல் - கோப்புப் படம்
பகிர்:

இஸ்ரேலின் தாக்குதலால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், செங்கடல் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து மீது மீண்டும் ஈரான் ஆதரவு யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலைத் தொடங்கவுள்ளனர்.

Advertisement

Advertisement

முன்னதாக, இஸ்ரேல் - காஸா போரின்போது செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, காஸாவுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதால், செங்கடலில் தாக்குதலை நிறுத்தியது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் செங்கடல் வழித்தடத்தில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, போரில் ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

summary

Yemen's Iranian-backed Houthi rebels to resume attacks on shipping in the Red Sea corridor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments