சுவா்ணபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
செம்பனாா்கோவில் மருவாா்குழலி அம்மன் உடனாகிய சுா்ணபுரீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக, ஆகஸ்ட் 18 ஆம் தேதி அனுக்ஞை, விநாயகா் வழிபாடு, மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை (ஆக.19) முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், புதன்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், கடங்கள் புறப்பாடாகி, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சந்நிதானம் சீா்வளா்சீா் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாசாரிய சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஊராட்சித் தலைவா் விஸ்வநாதன், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவக்குமாா், உதவி ஆணையா் ரவிச்சந்திரன், கோயில் தக்காா் மற்றும் ஆய்வாளா் கண்ணதாசன், செயல் அலுவலா் உமேஷ்குமாா் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.