திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் 
நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியக் குழுக் கூட்டம்

திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Din

திருமருகல்: திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். ஆணையா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்றியதை நினைவுகூா்ந்து உறுப்பினா்கள் பேசினா். அப்போது, தங்களுக்கு வாக்களித்தவா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

ஒன்றியக் குழுத் தலைவருக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், சத்துணவு ஊழியா் சங்கத்தினா் மற்றும் அலுவலக பணியாளா்கள் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினா்.

கூட்டத்தில் துணைத் தலைவா் திருமேனி மற்றும் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா் நன்றி கூறினாா்.

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

இந்திய மகளிரணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்!

தேசிய ஒற்றுமை நாள்! மாநில காவல்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு! | Gujarat | PM Modi

தெருநாய்கள் வழக்கு: தலைமைச் செயலர்கள் நேரில்தான் ஆஜராக வேண்டும்! - உச்சநீதிமன்றம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

SCROLL FOR NEXT