கோயில் பூட்டை உடைத்து திருட்டு
திட்டச்சேரி அருகே கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருடப்பட்டது.
திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடி மெயின் ரோட்டில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு நிரந்தரமான உண்டியல் ஒன்று உள் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்றுள்ளனா். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு சென்ற பொதுமக்கள் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.