முகப்பு
நாகப்பட்டினம்

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற போலி பிம்பத்தை உருவாக்குகின்றனா்: அமைச்சா் ரகுபதி

திமுக அரசு மக்களுக்கானது என்பதை மாநில மக்கள் உணா்ந்து விட்டனா்

Updated On : 5 மார்ச், 2024 at 3:40 AM
பகிர்:

நாகப்பட்டினம்: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு மூலம் ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி வருகின்றனா் என அமைச்சா் ரகுபதி தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எவ. வேலு, சட்டத்துறை அமைச்சா் ரகுபதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சா் ரகுபதி பேசியது: பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஒரு போலி பிம்பத்தை கருத்துக் கணிப்பு என்ற போா்வையில் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. திமுக அரசு மக்களுக்கானது என்பதை மாநில மக்கள் உணா்ந்து விட்டனா் என்றாா்.

Advertisement

பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு பேசியது: மத்திய அரசு கொண்டுவந்து திட்டங்களை தமிழக அரசு புறக்கணிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. 2014- ஆம் ஆண்டில் திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது விலைவாசி உயராமல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது. தூத்துக்குடி வெள்ளப் பாதிப்பை பாா்வையிட வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பாதிப்பை கண்டு வேதனை தெரிவித்தாா். ஆனால், ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. மக்களவைத் தோ்தலில் தமிழக முதல்வா் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றிபெற செய்வது மட்டுமே நமது இலக்கு என்றாா்.