முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்கும்!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் தெரிவித்தார்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 12:50 pm IST
மோகன் குமார் - ஏஎன்ஐ
பகிர்:

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் இன்று (ஏப். 9) தெரிவித்தார்.

புதுவையில் 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தவெக - நேயம் மக்கள் கழகம் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.

Advertisement

Advertisement

புதுச்சேரி, காரைக்காலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 37.06% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பாஜக மாநில செயலாளர் மோகன் குமார் வில்லியனூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

''மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இங்கு இரட்டை என்ஜின் அரசை மக்கள் விரும்புகின்றனர். அனைவரும் ஒரு வளர்ந்த புதுச்சேரிக்காக வாக்களித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சியைப் பெறவே பொதுமக்கள் விரும்புகின்றனர். இங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்'' எனக் கூறினார்.

NDA will form its government in Puducherry BJP State General Secretary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.