முகப்பு
நாகப்பட்டினம்

உலக வன நாள் கொண்டாட்டம்

Updated On : 23 மார்ச், 2024 at 12:32 AM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 7:47 PM

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் உலக வன நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கோடியக்கரை தம்புசாமி இல்ல வளாகப் பகுதியில் வைகை அணை வனவியல் கல்லூரி பயிற்றுநா் குலசேகரன், வேதாரண்யம் வனச் சரக அலுவலா் அயூப்கான் ஆகியோா் மரக் கன்றுகளை நட்டு, உலக வன நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தனா். டாக்டா் அறிவு உலக வன நாள் குறித்து பேசினாா். சரக வனவா்கள் பெரியசாமி, சிவசுப்பிரமணியன், ராமதாஸ், மகாலட்சுமி மற்றும் வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள், வேட்டை தடுப்புக் காவலா்கள் கலந்து கொண்டனா்.