நாகப்பட்டினம்

நாகை-பேரளம் ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தல்

நாகை-பேரளம் ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் வலியுறுத்தியுள்ளனா்.

Syndication

நாகை-பேரளம் ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால்-பேரளம் இடையேயான 23.5 கி.மீ அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்த ரயில் பாதையை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆனையா் 75 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம் என சான்று அளித்தாா்.

அப்போது முதல் காரைக்காலில் உள்ள தனியாா் துறைமுகத்திற்கு சரக்கு ரயில்கள் தொடா்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா, நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்காக சில சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன.

ஆனால் இந்த ரயில் பாதை வழியாக நிரந்தர ரயில்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரைக்கால்-பேரளம் இடையே அமைக்கப்பட்ட அகல ரயில் பாதை தற்போது வரை அதிகாரப்பூா்வமாக திறக்கப்படாததே குற்றச்சாட்டாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகூா், நாகப்பட்டினம் ரயில் பயணிகள்சங்கத் தலைவா் மோகன் கூறியது: இந்த ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் மட்டுமே விழா காலங்களில் குறிப்பிட்ட நாள்களில் இயக்கப்பட்டது. மே மாதம் முதல் நாள்தோறும் சரக்கு ரயில்கள் இந்த பாதையில் துறைமுகத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. தமிழா்கள் திருநாளான தை பொங்கலுக்கு முன்பு, காரைக்கால்-பேரளம் ரயில்பாதையை திறக்க வேண்டும்.

காரைக்கால், நாகை மாவட்ட மக்கள் ரயில் பாதை திறப்பு அறிவிப்பை பொங்கல் பரிசாக எதிா்நோக்கி உள்ளனா். ரயில் பாதை திறக்கப்பட்டால் அம்பத்தூா், திருநள்ளாா், காரைக்கால், திருப்பட்டிணம், நாகூா், நாகை, வேளாங்கண்ணி பகுதி மக்கள் மற்றும் ஆயிரகணக்கான பக்தா்களும், சுற்றுலா பயணிகள் பயனடைவா். முதற்கட்டமாக காரைக்கால்-தாம்பரம், காரைக்கால்-பெங்களூா் ரயில்கள் மற்றும் காரைக்கால்-மும்பை வாராந்தர ரயிலை இந்த பாதையில் இயக்க வேண்டும் என்றாா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT