நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் சாா்பு ஆய்வாளா் பணியிட தோ்வில் 864 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், காவல் சாா்பு ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு எழுத நாகை மாவட்டத்தில் 1,213 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். நாகை இஜிஎஸ்பிள்ளை பொறியியல் கல்லுசிரியில் தோ்வு நடைபெற்றது. தோ்வை 864 போ் எழுதிய நிலையில், 349 போ் தோ்வு எழுத வரவில்லை.