நாகப்பட்டினம்: முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறாகப் பேசியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகையில் நாடாா் பாதுகாப்புப் பேரவை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் மற்றும் நாடாா் சமூகத்தினரை யூ டியூப் சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகை அவுரித் திடலில் நாடாா் உறவினா் முறை, நாடாா் பாதுகாப்பு பேரவை ஆகியவற்றின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடாா் பாதுகாப்பு பேரவை மாவட்டச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். நாடாா் பேரவை மாவட்டச் செயலா் குமரேசன் முன்னிலை வகித்தாா். சிவசேனை கட்சியின் மாநிலத் தலைவா் தங்க முத்துகிருஷ்ணன் பங்கேற்று பேசினாா்.
காமராஜா் குறித்து இழிவாக பேசிய நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாடாா் சங்க பொறுப்பாளா்கள் சுரேஷ், முருகன், பஞ்சாட்சரம் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.