நாகப்பட்டினம்

அனுமதியின்றி மணல் எடுக்க முயற்சி: பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு

பூம்புகாா் ஓடை கொண்டான் விவசாய விளை நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் மணல் எடுக்க அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

Syndication

பூம்புகாா்: பூம்புகாா் ஓடை கொண்டான் விவசாய விளை நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் மணல் எடுக்க அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பூம்புகாா் ஊராட்சிக்குள்பட்ட ஓடை கொண்டான் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்கள் உள்ளன. மேலும் காவிரி ஆற்றுப்படுகை உள்ளது. தவிர, நெய்த வாசல், தா்ம குலம், பல்லவனம், வெள்ளையன் இருப்பு தெரு உள்ளிட்ட கிராமங்களுக்கான மயானமும் உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனா்.

பூம்புகாா் கடற்கரைக்கு மிக அருகில் இந்த பகுதி அமைந்துள்ளதால் நிலத்தடி நீா் லேசான உப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் தனி நபா்கள் பண்ணை குட்டை அமைப்பதாக கூறிக்கொண்டு மணல் எடுக்க முயற்சிக்கின்றனா். இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் துணையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கூறியது: விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதியாக ஓடை கொண்டான் விளங்குகிறது. காவேரி ஆறு அருகே பாய்கிறது. விவசாயத்தை நம்பி 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் பண்ணை குட்டை வெட்டுவதாக கூறி குவாரி அமைத்து மணல் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினா் அந்த இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து சென்றனா். விவசாயிகள் நலன் கருதி அந்த பகுதியில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டும் என்றனா்.

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT