கோப்புப்படம் 
நாகப்பட்டினம்

நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை

Din

நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி:

நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில், ஆனி மாத பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தேரோட்டம் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெற உள்ளதால், நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, ஜூலை 19-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

விஜய்யை இழுக்க பாஜகவுக்கு அவசியமில்லை: பியூஷ் கோயல்

யு19 உலகக் கோப்பை: கேப்டன் அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 254 ரன்கள் இலக்கு!

மும்பையில் குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் எரிந்து நாசம்

OG Producer எங்க அப்பாதான்! - TTT வெற்றி விழாவில் ஜீவா

தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT