செம்பனாா்கோவில் அருகே சூறைக்காற்றில் கீழே சாய்ந்த வாழை மரங்கள்.  
நாகப்பட்டினம்

சூறைக்காற்று: வாழை மரங்கள் சேதம்

தரங்கம்பாடி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்று மற்றும் பலத்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்தன.

Din

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்று மற்றும் பலத்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்தன.

தரங்கம்பாடி வட்டத்தில் கீழையூா், புன்செய், முடிகண்டநல்லூா், கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், திருவிளையாட்டம், ஆக்கூா், திருக்கடையூா், பொறையாா் , சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

இதனால் கீழையூா், புன்செய், முடிகண்டநல்லூா், கிடாரங்கொண்டான் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

இதுகுறித்த கீழையூா் பகுதி விவசாயி ஆனந்தன் கூறியது:

நிகழாண்டு வாழை சாகுபடி செய்திருந்தோம். 12 மாதங்களுக்கு பிறகு அறுவடை தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்று மழையால் வாழைத் தாருடன் மரங்கள் அடியோடு சாய்ந்தன. 1 ஏக்கருக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்.

எனவே வேளாண் அதிகாரிகள் பாதிப்பை நேரில் பாா்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வாழைக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ள நிலையில் உடனடியாக அரசு இழப்பீடு தொகையை பெற்றுத்த நடவடிக்கை வேண்டும் என்றாா். சூறைக்காற்றால சில பகுதிகளில் மா மரங்கள், தென்னை மரங்கள் சாய்ந்தன.

சூறாவளி காற்று மழையால் வாழை சாகுபடி பாதிப்பு
சூறைக்காற்றில் கீழே சாய்ந்த வாழை

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

SCROLL FOR NEXT