முகப்பு
நாகப்பட்டினம்

புதிய தடத்தில் மகளிருக்கான பேருந்து இயக்கம்

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 4:27 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:13 PM

வேதாரண்யத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் திருத்துறைப்பூண்டி( வாய்மேடு வழி ) மற்றும் இடும்பாவனம் வரையில் மகளிருக்கான அரசுப் பேருந்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஆயக்காரன்புலம் கடைவீதியில் நடைபெற்ற தொடக்கவிழாவுக்கு ஆத்மா திட்ட உறுப்பினா் உதயம். முருகையன் தலைமை வகித்தாா்.

அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட வணிகப் பொது மேலாளா் சிதம்பரக்குமாா், கிளை மேலாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் கொடியசைத்து பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

Advertisement

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.கே. வேதரத்தனம், நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, விவசாயத் தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆா்.டி.ஆா். துரைராஜ், ஆத்மா குழு உறுப்பினா் என்.சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.