நாகையில் ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா். 
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் வருவாய்த் துறையினா் சாலை மறியல்!

நாகை மற்றும் மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

நாகை மற்றும் மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினரை போலீஸாா் கைது செய்தனா்.

வருவாய்த் துறையில் சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.

நாகை: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தனஞ்செயன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், மறியல் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT