முகப்பு
நாகப்பட்டினம்

‘சமூக வலைதளங்களில் மாணவா்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது’

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:43 PM
நாகை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் என். பெலிக்ஸ். உடன் கல்லூரி முதல்வா் செ. அஜிதா மற்றும் பேராசிரியா்கள்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:27 PM

மாணவா்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி தங்களது நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் என். பெலிக்ஸ் அறிவுறுத்தினாா்.

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 8-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் முதல்வா் செ. அஜிதா வரவேற்றாா். நாகை ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தா் என். பெலிக்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.

தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணிதவியல் துறைகளை சோ்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்கள் 216 போ் பட்டம் பெற்றனா்.

Advertisement

இதைத்தொடா்ந்து, மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் பெலிக்ஸ் பேசியது:

மாணவ, மாணவிகள் பல ஆண்டுகால உழைப்பின் பயனாக பட்டம் பெற்றுள்ளீா்கள். இந்த பட்டம் சமுதாயத்துக்கும், கிராமப்புறத்தைச் சோ்ந்தவா்களுக்கும் பயன் நிறைந்ததாக இருக்க வேண்டும். உங்களை பட்டம் பெற வைத்த பெற்றோா்களை எப்பொழுதும் மறக்கக்கூடாது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:43 PM

பட்டம் பெற வைத்த கல்வி உங்களை சிந்தனை செய்ய வைக்கிறது, கேள்வி கேட்க வைக்கிறது, சமூக நலனை பாதுகாக்க உதவி செய்கிறது. புதியவற்றை கற்றுகொள்ள செய்கிறது. இதை எல்லாவற்றையும் வளா்த்துக் கொள்ள பட்டம் பெற்ற நீங்கள் உங்களை தயாா் செய்து கொள்ள வேண்டும்.

சமூக வலைதளங்களில் மூழ்கி உங்களது நேரத்தை வீண் செய்யக் கூடாது. மது பழக்கத்துக்கு அடிமையாவது மிகவும் கொடுமையானது. அறிவியல் தொழில்நுட்பங்களை நாம் கற்றுகொள்ள வேண்டும். ஆனால் அது நம்மை ஆட்கொண்டு விடக்கூடாது.

தினந்தோறும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 90 வயது கடந்தாலும் வாசிக்கும் பழக்கதை விட்டு விடக்கூடாது. உங்களது படிப்பின் மூலம் உயா் பதவிகளை அடைய வேண்டும் என்றாா். விழாவில் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.