நாகப்பட்டினம்

ஹெலிகாப்டா் இறங்கு தளத்துக்கு எதிா்ப்பு

வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டா் இறங்கும் தளம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டா் இறங்கும் தளம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வேளாங்கண்ணி சிவன் வடக்கு தெரு, சக்தி விநாயகா் கோயில் தெரு பொதுமக்கள் ஆட்சியா் ப. ஆகாஷை நேரில் சந்தித்து திங்கள்கிழமை அளித்த மனு: எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கிறோம். இங்கு கூரை வீடுகள், காலனி வீடுகள், தனியாா் மருத்துவமனை உள்ளன. வேளாங்கண்ணி திருவிழா காலங்களில் தங்கள் பகுதி ஒருவழி சாலையாகவும், போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது.

தற்போது, வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டா் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பகுதியில்ஹெலிகாப்டா் வந்து செல்லும்போது, குடியிருப்பு மக்களுக்கும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவா். எனவே, குடியிருப்பு இல்லாத வேறு இடத்தில் ஹெலிகாப்டா் இறங்கும் தளம் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி செங்காா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

குறவா் சமூகத்தினா் நூதனப் போராட்டம்

முசிறி, ஸ்ரீரங்கத்தில் இன்றைய மின்தடை ரத்து

ஒசூா் விமான நிலையத்தின் மதிப்பை பிரதமா் அலுவலகம் அடையாளம் காணும்: டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT