காரைக்கால்

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

DIN

காரைக்காலில் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் வரும் மே 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. பேரணிக்கு வடக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. குணசேகரன் தலைமை வகித்தார். பேரணியை கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ் தொடங்கி வைத்தார்.
பேரணி, காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
இதேபோல் காரைக்கால் காத்தாப்பிள்ளைக் கோடி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் வடக்கு மாவட்ட கண்காணிப்பாளர் கே.குணசேகரன் பங்கேற்று, இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அப்போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த பேரளம் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவர் காவல்துறையினரால் கெüரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மர்த்தினி, காவல் ஆய்வாளர்கள் ராஜசேகர், மரிய கிறிஸ்டியன் பால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT