முகப்பு
காரைக்கால்

முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

காரைக்காலில் முக்கிய சாலைகள், சந்திப்புகளில் வேகத் தடை வைக்கவேண்டும் என  காரைக்கால் தெற்குத் தொகுதி எம்எல்ஏ  வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

காரைக்காலில் முக்கிய சாலைகள், சந்திப்புகளில் வேகத் தடை வைக்கவேண்டும் என  காரைக்கால் தெற்குத் தொகுதி எம்எல்ஏ  வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் நகரப் பகுதியில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் போன்ற  இடங்கள் மக்கள் அதிகமாகக் கூடும் வகையிலும், போக்குவரத்து வாகனங்கள் அதிகமாக வரக்கூடிய நிலையிலும் இருக்கின்றன. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தப் பகுதிகளில் வேகத் தடை அமைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு கடிதம் வாயிலாக பல மாதங்களுக்கு முன்பே தெரிவித்ததோடு, புதுச்சேரி முதல்வர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளேன். ஆனால், இதுவரை கோரிக்கை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளுக்கு நாள் விபத்துகள் அதிகமாகிவருவதால், பொதுமக்கள், மாணவ, மாணவியர் நலன் கருதி முக்கியப் பகுதிகளைக் கண்டறிந்து வேகத்தடை அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →