காரைக்கால்

ஸ்ரீ மகா காளியம்மனுக்கு புஷ்பாஞ்சலி

DIN

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் வைகாசி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் பகுதி கோயில்பத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ பெரியாச்சி, ஸ்ரீ வீரன் சன்னிதிகள் கொண்ட காளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது.  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் திருவிளக்கு வழிபாடு, கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் வண்ண மலர்களை வைத்து வீதிவலம் வந்தனர்.
பக்தர்கள் கொண்டு வந்த மலர்களை அம்மன் முன்பு கொட்டப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ‑

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT