காரைக்கால்

நோன்பு காலம்: அதிகாலையில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தல்

DIN

ரமலான் நோன்பு காலம் ஒரு மாதத்துக்கு தினமும் அதிகாலை முதல் குடிநீர் விநியோகம் செய்யுமாறு திருப்பட்டினம் ஆணையரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
காரைக்கால் மனிதநேய மக்கள் கட்சியின் திருப்பட்டினம் தொகுதி செயலாளர் முஹம்மது ஆஷிக் தலைமையிலான நிர்வாகிகள் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸை வியாழக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
 திருப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் அருகில் 2013-ஆம் ஆண்டு  அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை வருகிற நோன்பு (மே 28) காலத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். நோன்பு காலத்தை கருத்தில் கொண்டு மே 28 முதல் ஒரு மாத காலத்துக்கு அதிகாலை 3.30 மணி முதல் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து முதல் திருமலைராஜனாறு பாலம் வரை உள்ள சாக்கடையை தூர்வாரி, கழிவுநீர் எளிதில் வெளியேறும் வகையில் அமைப்புகள் உருவாக்கித்தர
வேண்டும்.
தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இத்தொட்டிகளில் குப்பைகளை குறித்த நேரத்தில் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவுத் தொழிலாளர்கள் எடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான அனைத்து  சாலைகளிலும் சாக்கடை வசதிகள் செய்துதரவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT