காரைக்கால்

கடல் அலையில் சிக்கிய மாணவர் சடலமாக மீட்பு

DIN

காரைக்கால் பகுதி கடலில் மாயமான மாணவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் லெனின் மகன் தமிழ்வாணன் (17) . தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவரும், நண்பர்கள் திலீப்ராஜ், பிரசன்னா ஆகியோர் வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரைக்குச் சென்று முகத்துவாரப் பகுதியில் இறங்கியுள்ளனர். கடல் சீற்றமாக இருந்த நிலையில், தமிழ்வாணன் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் இவரை காப்பாற்ற முயற்சித்தும் பயனளிக்காத நிலையில், காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, கடலோரக் காவல் நிலையத்தினர், தீயணைப்புத் துறையினர் கடற்கரைக்குச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். கடலோரக் காவல் நிலைய ரோந்து படகு மூலம் தேடியும் தமிழ்வாணனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், முகத்துவாரத்தின் தெற்கு பகுதியில் கருக்களாச்சேரி கடற்கரையில் தமிழ்வாணனின் சடலம் வெள்ளிக்கிழமை ஒதுங்கிக் கிடந்ததை அப்பகுதியினர் பார்த்து, நிரவி காவல்நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT