காரைக்கால்

காரைக்காலில் மீண்டும் தொடங்கியது மழை

DIN

காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாள்களாக சற்று ஓய்ந்திருந்த வடகிழக்குப் பருவமழை வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் தொடங்கியது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், கடந்த 2 நாள்களாக காரைக்கால் பகுதியில் மழை சற்று ஓய்ந்திருந்தது. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பிற்பகலுக்குப் பிறகு காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதன் காரணமாக, மாவட்டத்தில் மழை பாதிப்பை சரிசெய்ய அமைக்கப்பட்ட குழு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: நேரடி நெல் விதைப்பு செய்த நிலப்பரப்பில் கடந்த ஒரு வாரமாக மழை நீர் தேங்கத் தொடங்கியது. இதை கடந்த 2 நாள்களாக மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில், தற்போது தொடங்கியிருக்கும் மழை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT