காரைக்கால்

குடிசை வீடு தீக்கிரை

DIN

காரைக்கால் பெரியப்பேட் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு தீக்கிரையானது.
காரைக்கால் பெரியப்பேட் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அம்சவள்ளி. கடந்த 2 நாள்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் அம்சவள்ளி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த போது, வீட்டின் மேற்பரப்பு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்போது அம்சவள்ளி சப்தமிட்டதையடுத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த காரைக்கால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து மின்கசிவு காரணாக நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட அம்சவள்ளிக் குடும்பத்தினருக்கு காரைக்கால் வடக்குத் தொகுதி பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் ஆறுதல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT