காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா பந்தல்கால் முகூர்த்தம்

DIN

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பந்தல்கால் முகூர்த்தம் வியாழக்கிழமை (நவ.16)  நடைபெறவுள்ளது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் வரும் டிச.19 -ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.
இதையொட்டி, கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை விழாவுக்கான முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும் கோயில் தனி அலுவலருமான ஆர்.கேசவன், சார்பு ஆட்சியரும் கோயில் நிர்வாக அலுவலருமான ஏ. விக்ராந்த் ராஜா, தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
பந்தல் கால் முகூர்த்தம் நடைபெற்றது முதல் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT