காரைக்கால்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம்

DIN

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைத் தாயார் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மூலவருக்கு புஷ்பாங்கி, தங்க அங்கி, சந்தனக் காப்பு உள்ளிட்ட பல அலங்காரங்கள் செய்யப்படுகிறது.
புரட்டாசி மாத வழிபாடுகளில் ஒன்றாக புதன்கிழமை இரவு, ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைத் தாயார் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
முன்னதாக  மாப்பிள்ளை அழைப்பு,  அலமேலு மங்கையார் சன்னிதியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் சன்னிதியில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாண உத்ஸவத்தின் சடங்குகளைத் தொடர்ந்து பெருமாள் சார்பில் பட்டாச்சாரியார் ஸ்ரீ அலமேலு மங்கைத் தாயாருக்கு திருமாங்கல்யதாரணம் செய்தார். தொடர்ந்து  தேங்காய் உருட்டும் வாரணமாயிரம் பாசுரம் படித்தல்  நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தனி அலுவலர் கே.ரேவதி, ஸ்ரீ ஆழ்வார் அருட்பணி மன்றத்தினர்  செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT