மின்நுகர்வோர் உடனடியாக கட்டணத்தைச் செலுத்த வலியுறுத்தல்
காரைக்கால் பகுதி மின் நுகர்வோர் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
காரைக்கால் பகுதி மின் நுகர்வோர் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மின் துறை செயற்பொறியாளர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் மாவட்டத்தில் மின் கட்டண பாக்கி வைத்துள்ளோர் தங்களது கட்டண நிலுவையை உடனடியாக செலுத்தவேண்டும். கட்டணம் செலுத்தாதோர் இணைப்பு துண்டிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. தொடர்ந்து மின் துறை மூலம் இணைப்பு துண்டிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், கட்டண நிலுவையுள்ளோர் கவனத்தில்கொள்ளவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.