முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு பயன்பாடு உள்ள நிலையில், காரைக்காலில் புதன்கிழமை தீபாவளி நாளில் பெரும் சேதமின்றி அமைதியாக முடிந்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு பயன்பாடு உள்ள நிலையில், காரைக்காலில் புதன்கிழமை தீபாவளி நாளில் பெரும் சேதமின்றி அமைதியாக முடிந்தது.
காரைக்காலில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பட்டாசு வெடிக்கும் நேரம், இடம், உரிய சப்த அளவு குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல் தரப்பட்டிருந்தது. பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுமாறும் மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பின் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதுபோல பல்வேறு பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி, புகையில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக உரை, பேரணி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
பொதுவாக பட்டாசு கொளுத்துவதன் மூலம் உடலில் தீக்காயம் ஏற்படுவது, வீடு உள்ளிட்டவை தீக்கிரையாவது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலையில், புதன்கிழமை மாவட்டம் முழுவதும் நடந்த தீபாவளி அமைதியாக முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரிரு இடங்களில் சிறிய குப்பை மேடு எரிந்ததாகவும், பனை மரம் எரிந்ததாகவும் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை எனவும் தீயணைப்புத்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். அதுபோல தீக்காயங்கள் ஏற்பட்டதற்கான பதிவுகளும் பெருமளவு இல்லை என மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →