முகப்பு
காரைக்கால்

துணை நிலை ஆளுநர் இன்று காணொலி மூலம் குறைகேட்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மாவட்ட மக்களிடம் வெள்ளிக்கிழமை (அக். 20) குறைகள் கேட்கவுள்ளதாக ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மாவட்ட மக்களிடம் வெள்ளிக்கிழமை (அக். 20) குறைகள் கேட்கவுள்ளதாக ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (அக். 20) மாலை 5  முதல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்குத் தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். புகார்களை எழுத்து வடிவில் அளிக்க வேண்டும் என்று
அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →