முகப்பு
காரைக்கால்

கால்நடைத்  துறையின் திட்டத்தின்கீழ் மானிய விலையில் பயனாளிகளுக்கு கோழிகள் வழங்கல்

கால்நடைத்  துறையின் திட்டத்தின்கீழ் மானிய விலையில் நபருக்கு 2 கோழிகள் வீதம் 1,150 கோழிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 29 மார்ச், 2018 at 9:28 AM
பகிர்:

கால்நடைத்  துறையின் திட்டத்தின்கீழ் மானிய விலையில் நபருக்கு 2 கோழிகள் வீதம் 1,150 கோழிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
புதுச்சேரி அரசு கால்நடை பாதுகாப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் கொல்லைப்புற கோழி வளர்ப்புத் திட்டம் அமலில் உள்ளது.  முட்டை மற்றும் கறி என இரு பயன்பாட்டுக்காக கோழிகளை மானிய விலையில் திட்டத்தின் மூலம் அளிக்கப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில், தொகுதி வாரியாக பயனாளிகளுக்கு கோழிகள் வழங்கப்படுகிறது. நிரவி- திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் கலந்துகொண்டு மானிய  விலையில் கோழிகள் குடும்ப அட்டைதாரருக்கு 2 கோழிகள் வீதம் வழங்கினார்.
திட்டம் குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கால்நடைத் துறை இணை இயக்குநர் ஜி.லதா மங்கேஷ்கர் கூறியது :  புதுச்சேரி அரசின் கால்நடைத் துறையில் கொல்லைப்புற கோழி வளர்ப்பு என கிரி ராஜா, கிரி ராணி என்கிற திட்டம் உள்ளது. பயனாளிக்கு முட்டை மற்றும் கறி என இரு பயன்பாட்டுக்காக 2 கோழிகள் 50 சதவீத மானியத்தில் தரப்படுகிறது.
காரைக்கால் பகுதியில் கோட்டுச்சேரி மற்றும் திருப்பட்டினத்தில் தலா 1,100 கோழிகள் வளர்ப்புக்கேற்ற பண்ணை உள்ளது. இதில் 6 வார கால அளவில் வளர்ந்த கோழிகளை சிகப்பு மற்றும் மஞ்சள்  நிற குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு ரூ.100-க்கு 2 கோழிகள் தரப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் நிகழாண்டு 10 ஆயிரம் கோழிகள் வழங்க இலக்கு நிர்ணயித்து கடந்த வாரம் முதல் வழங்கல் பணியை தொடங்கியுள்ளோம். தற்போது  நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 1,150 கோழிகள் வழங்கப்பட்டுள்ளன. 
பயனாளிகள் முட்டை மற்றும் கறியின் மூலம் சுய வருவாயை கோழிகள் மூலம் ஈட்டும் நோக்கிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.