காரைக்கால்

சிறுபான்மையோர் தின விழா

DIN

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, சமூக நலத்துறை சார்பில், காரைக்கால் நிர்மலாராணி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறுபான்மையோர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில், மனிதகுல மேன்மைக்கு மதம் போதிப்பது என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் எம்.ஐ. லியாக்கத் அலி, ஓய்வுபெற்ற ஆசிரியர் பக்ஷிராஜன், புனித சூசையப்பர் முதியோர் பாதுகாப்பு இல்ல அருட்சகோதரி இருதயமேரி ஆகியோர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்கள் எவ்வாறு மேற்கண்ட கருத்தை போதிக்கின்றன என்பது குறித்து விளக்கிப் பேசினர். சமூக நலத்துறை உதவி இயக்குநர் (பொ) ஜி. காஞ்சனா வரவேற்றார். நல அதிகாரி கே.சுந்தரம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவியர் மற்றும்  சமூக அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT