காரைக்கால்

பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடு தொடங்கியது

DIN

திருமலை -திருப்பதி தேவஸ்தானம் போன்று சுப்ரபாத சேவையுடன், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடு திங்கள்கிழமை தொடங்கியது.
புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காரைக்கால் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
காரைக்காலில் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் மூலவராக அருள்பாலிக்கும் ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோயிலில், புரட்டாசி மாதத்துக்கான சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை தொடங்கியது.
திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் நடைபெறக்கூடிய  சுப்ரபாத சேவையைபோன்று இக்கோயிலில் புரட்டாசி மாத முதல் நாளில்  வழிபாடு தொடங்கப்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மூலவர் ரங்கநாத  பெருமாளும், உத்ஸவர் நித்யகல்யாண பெருமாளும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
சுப்ரபாத சேவையுடன் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து  பக்தர்கள்  தரிசனம் செய்யத் தொடங்கினர். முதல் நாளிலேயே திரளான பக்தர்கள் அதிகாலையிலிருந்து பெருமாளை தரிசித்தனர். முதல் நாளான திங்கள்கிழமையிலிருந்து  இரவு 7 முதல் 8 மணி வரையிலான சகஸ்ரநாம அர்ச்சனையும் தொடங்கப்பட்டது. இது புரட்டாசி மாதம் முழுவதும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT