காரைக்காலில் பல்வேறு தொழிற்கல்வி பயிற்சியை இலவசமாகப் பெற இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.
மாவட்ட ஆட்சியரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : புதுச்சேரி மாநில திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பில் மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. CNC Operator Turning, CCTV Installation Technician, DTH Set Top Box Installation & Service Tecnician, Solar Panel Installation Technicain, Field Technician-Computing and Peripherals போன்ற பிரிவுகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்களைப் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் உள்ள புதுச்சேரி திறன் மேம்பாட்டுக் கழகத்திலும், வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.9.2018-க்குள் சமர்ப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.