காரைக்கால்

தொழிற்சாலை உணவகத்தில் இட்லி சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி

DIN

திருநள்ளாறு அருகே உள்ள தனியார் தொழிற்சாலை உணவகத்தில் இட்லி சாப்பிட்ட 10 தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாந்தி ஏற்பட்டது. 
காரைக்கால் பகுதி, திருநள்ளாறு அருகே தனியார் டைல்ஸ் கல் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுகிறது. தொழிலாளர்களுக்காக ஆலை வளாகத்தில் ஒப்பந்த முறையில் தனியாரால் உணவகம் (கேண்டீன்) நிர்வகிக்கப்படுகிறது. வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை பணியிலிருந்த தொழிலாளர்கள் உணவகத்துக்குச் சென்று இட்லி சாப்பிட்டனர். அப்போது, ஒருவரது இட்லியில் தவளையின் உடல் சிதைந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் ஒவ்வொருவருக்கும் வாந்தி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தேனூரில் உள்ள அரசு சமுதாய நலவழி மையத்தில், அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்காக 7 ஆண்கள், 3 பெண் தொழிலாளர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் 7 பேர் சிறிது நேரத்தில் வீடு திரும்பினர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT