காரைக்கால்

மரக்கன்றுகளை சிறப்பாக பராமரித்து வருபவர்களுக்கு விருது

DIN

மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வரும் அமைப்பினருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காரைக்கால் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் காரைக்கால் அம்மையார் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கல் நிகழ்ச்சிஅண்மையில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக, பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2-ஆவது நிகழ்ச்சியாக, காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரக்கன்றுகள் நட்டு முறையாக பராமரித்து வரும் அரசுத் துறையினர், அமைப்பினரை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் கே. ரேவதி கலந்துகொண்டு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு, திருப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  சர்வைட் ஆங்கிலப் பள்ளி, பொன்பேத்தி அரசுப் பள்ளி மற்றும் அன்னை தெரஸா செவிலியர் கல்லூரி, திருநள்ளாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காவல் நிலையம் ஆகியவற்றில் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வருவதை பாராட்டும் வகையில், திருநள்ளாறு காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட  நிறுவன அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில், காரைக்கால்  நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் , நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் செல்வராஜ், புதுவை மாநிலச் செயலர்  திருமுருகன், காரைக்கால் மாவட்டச் செயலர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காரைக்கால் அம்மையார் பள்ளி தாளாளர் ஸ்டாலின் மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காரைக்கால் அம்மையார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் 
ஆகியோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT