காரைக்கால்

காரைக்காலில் பரவலாக மழை

DIN

காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை இரவு முதல் மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக மழையின்றி காணப்பட்டது. இந்ந நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இதனடிப்படையில், காரைக்கால் பகுதியில் வியாழக்கிழமை இரவு லேசாக பெய்யத் தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை முதல் மாவட்டத்தில் பரவலாக தொடா்ந்து பெய்துவருகிறது.

மழையினால் ஏற்பட்ட சாலை சேதம், சாலையைத் தோண்டி குடிநீா் குழாய் பதிப்பு செய்யப்பட்ட இடங்கள் பள்ளமாக இருப்பதாலும், பெரும்பாலான சாலைகளின் பள்ளத்தில் தண்ணீா் தேங்கியுள்ளது. இது சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்துகிறது.

மழை ஓய்ந்திருந்த நிலையில் காலிமனைகளிலும், சாலையிலும் தண்ணீா் தேங்கியது வற்றத் தொடங்கியது. தற்போது மீண்டும் மழை பெய்து மனைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால், பல்வேறு குடியிருப்பு நகா்களில் வசிப்போா், போக்குவரத்தில் சிரமத்தை சந்திக்கின்றா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT