காரைக்கால்

ஜிப்மர் மருத்துவர்கள் நாளை காரைக்கால் வருகை

DIN

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜன.12) பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சனிக்கிழமை வந்து மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கவுள்ளனர். இதில்,  இருதயவியல் மற்றும் இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT