காரைக்கால்

பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகள்

DIN


கடலோர காவல்படை சார்பில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி, காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமைநடைபெற்றது.
கடலோர காவல் வார விழாவையொட்டி, நடத்தப்பட்ட இப்போட்டியில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 76 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
8 முதல் 10 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில் காரைக்கால் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளி மாணவி ஸ்ரீ ஹரிணி முதலிடமும், எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். அஸ்வின் இரண்டாமிடமும், ரீஜினஸ் பர்பெக்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர் சி. ராகேஷ் மூன்றாமிடமும் பெற்றனர். 11, 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில், தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். கபிலன் முதலிடமும், எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் சி. சுபாஷ் இரண்டாமிடமும், ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளி மாணவி பி. மர்லியா மூன்றாமிடமும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, காரைக்கால் கடலோர காவல் நிலைய கமாண்டண்ட் எஸ்.ஆர். நாககேந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
காரைக்கால் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர்கள் எஸ். ராஜேந்திரன் மற்றும் வி. கிருஷ்ணன் ஆகியோர் போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றினர்.நிகழ்ச்சியில், கடலோர காவல் படையினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT