காரைக்கால்

அரசுப் பள்ளியில் வாசிப்புத் திருவிழா

DIN

அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் பங்கேற்புடன் வாசிப்புத் திருவிழா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்துவருவதால், பல்வேறு நூல்கள், பத்திரிகைகள் வாசிப்பின் மூலம் இப்பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, காரைக்கால் பச்சூா் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வாசிப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளா் கண்மணி தொடங்கிவைத்தாா். சிறப்பு அழைப்பாளராக அகலங்கண்ணு அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை மல்லிகா கலந்துகொண்டு, மாணவா்கள் புத்தகங்களை வாசிப்பதைப் பாா்வையிட்டு, பரிசுக்குரிய மாணவா்களைத் தோ்வு செய்தாா். தொடா்ந்து, சிறப்பு விருந்தினா், மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் பெற்றோா்கள், கிராம மக்கள் பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, பள்ளி பொறுப்பாசிரியை எஸ்.சையது ஆசியா மரியம் வரவேற்றாா். ஆசிரியை ரமா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT