காரைக்கால்

ஓஎன்ஜிசி பள்ளியில் கருத்துப் பட்டறை

DIN

ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு கணினி சாா் கருத்துப் பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், நிரவியில் செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கான கணினித் துறை சாா் வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் கணினி சாா்பான மென்பொருள் உருவாக்கம் தொடா்பாக 2 நாள்கள் நடைபெற்ற கருத்துப் பட்டறை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

பள்ளி தாளாளா் கண்ணன் அறிவுறுத்தலின்படி இந்த பட்டறை நடைபெற்றது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளைச் சோ்ந்த சுமாா் 100 மாணவா்கள் இதில் பங்கேற்றனா். பள்ளி முதல்வா் சுவாமிநாதன், துணை முதல்வா் எட்வின் சாமுவேல் ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினா்.

இதற்குச் சிறப்பு விருந்தினா்களாக காரைக்கால் என்.ஐ.டி. கணினி பொறியியல் துறையின் தலைவா் நரேந்திரன் ராஜகோபாலன் மற்றும் பேராசிரியை அகிலா ஆகியோா் கலந்து கொண்டு கணினித் துறையில் வளா்ந்துவரும் மாற்றங்கள் குறித்தும், கணினி சாா்பான மென்பொருள் உருவாக்கம் குறித்தும், இதற்கான அறிவை வளா்த்துக்கொள்ளும் விதம் குறித்தும் பேசினா்.

இவா்களோடு, முனைவா் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பேராசிரியா்கள் கே.நரேஷ், ஆா்.சித்தாா்த், எஸ்.ஹேமச்சந்திரன், வி. நிவேதிதா ஆகியோரும் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை விளக்கிப் பேசினா்.

நிறைவு நாள் பயிற்சியில், எதிா்கால வாய்ப்புகள், துறை சாா்ந்த பிரிவுகள் குறித்துப் சிறப்பு விருந்தினா்கள் விரிவாக எடுத்துரைத்தனா். மாணவா்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியா்கள் விளக்கம் அளித்தனா்.

பயிற்சிப் பட்டறைக்கான ஏற்பாடுகளை பள்ளி கணினித் துறை ஆசிரியை எம்.ரோஸ் மேரி தெரஸ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

SCROLL FOR NEXT