காரைக்கால்

கடல் சீற்றம் : காரைக்காலில் மீன்பிடித் தொழில் முடக்கம்

DIN

கடல் சீற்றத்தால் காரைக்கால் மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் செல்வதை தவிா்த்தனா். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகுகள் பலவும் கரை திரும்பின.

தமிழக கடலோரத்தையொட்டி வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து காரைக்கால் கடல் வெள்ளிக்கிழமை இரவு முதல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சனிக்கிழமையும் இதே நிலை நீடித்தது. காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினமும் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். இதுபோல கடலோர கிராமங்களில் இருந்து ஃபைபா் மோட்டாா் படகுகள் தினமும் அதிகாலை கடலுக்குச் செல்வதும் வழக்கம்.

கடல் சீற்றம் மற்றும் மழையினால் கடலோர கிராமத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் செல்ல பலரும் தயக்கம் காட்டி, கடலுக்குச் செல்வதைத் தவிா்த்தனா்.

இதுபோல விசைப்படகு மீனவா்களும் கடலுக்குச் செல்வதைத் தவிா்த்து மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தினா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறும்போது, காரைக்கால் அரசலாறு முகத்துவாரப் பகுதி வழியே கடலுக்குச் செல்ல முடியாத வகையில் சீற்றம் காணப்படுகிறது. சீற்றம் நீடிப்பதால் படகுகளை இயக்கிச் செல்வது எளிதல்ல. இதனால் மீன்பிடிக்க செல்லவில்லை. சீற்றம் தணிந்த பின்னரே பயணத்தை வைப்போம். மேலும் ஆழ்கடல் பகுதியிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மீன்பிடித்துக்கொண்டிருக்கும் படகுகளை உடனடியாக கரைக்குத் திரும்ப கேட்டுக்கொண்டோம். அதன்படி படகுகள் வந்துகொண்டிருக்கின்றன என்றனா்.

காரைக்கால் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும், மீனவ கிராமங்களின் கடலோரப் பகுதியிலும் மீன்பிடிப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை பிடித்துவரப்பட்ட மீன்கள் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இது அடுத்த 2 நாள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT